தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.9.38 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
Published on

கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தாட்கோ (இங-அதஐநஉ) திட்டத்தின்கீழ் கடந்த 2024-25- ஆம் ஆண்டு 79 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம், 2025-26 -ஆம் ஆண்டில் 56 பேருக்கு ரூ.3.93 கோடி மானியம் என மொத்தம் 9.38 கோடி மானியத்தில் 135 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com