முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

கோவையில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் புதன்கிழமை திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :

கோவையில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் புதன்கிழமை திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவிநாசி சாலையில் உள்ள அந்த தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் இறுதியாண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புதன்கிழமை பிற்பகலில் கல்லூரி வளாக நுழைவு வாயில் பகுதியில் திரண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் கூறியதாவது:
கல்லூரியில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க வேறு கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போட்டி நாளன்று மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் பயிற்சிக்கு தனியாக அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும் மாணவிகளின் செல்லிடப்பேசிகளை நிர்வாகம் வாங்கி சோதனை செய்ததைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
 மேலும், ஒரு வகுப்புக்கு பேராசிரியர் வரவில்லை என்றால் அந்த வகுப்புக்கு வேறு பேராசிரியரை அனுப்ப வேண்டும். வகுப்புகள் இல்லாத நேரத்தில் மாணவர்களை வகுப்பறைக்குள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
 மாணவர்களின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர், மாணவர் தரப்பு பிரதிநிதிகள் 5 பேர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மாணவர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்றும் புதிய விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாகவும் முதல்வர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வகுப்புகளுக்குத் திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.