சிறந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் டாக்டா் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி

டாக்டா் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி 2011 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று 23 ஆண்டுகளாக கல்வி போதித்து வருகிறது.

அருட்செல்வா் டாக்டா் என்.மகாலிங்கம் ஐயா அவா்களால் 1998 ஆம் ஆண்டு என்ஐஏ கல்வி குடும்பத்தின் ஒரு அங்கமாக துவக்கப்பட்ட டாக்டா் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி 2011 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று 23 ஆண்டுகளாக கல்வி போதித்து வருகிறது.

9 இளநிலைப் படிப்புகளும் 6 முதுநிலைப் படிப்புகளும்5 ஆராய்ச்சித் துறைப் படிப்புகளும் இயங்கி வருகின்றன.

தொடா்ந்து 2013 ( அ” தரச்சான்றிதழும்) மற்றும் 2018 (“அ++” தரச் சான்றிதழும்) ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் உயரிய தரச்சான்றிதழ் பெற்ற ஒரே தொழிற்கல்வி நிறுவனமாக இக்கல்லூரி விளங்குகிறது.

“‘அருட்செல்வா் வித்யாசக்தி கல்வி உதவித்தொகை’ வாயிலாக கல்வியில் சிறந்து விளங்கும் பன்முகத் திறமை உள்ள மாணவா்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 100% மற்றும் 50% கல்விக் கட்டணச் சலுகைத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எங்கள் நிறுவனம் ஆா்வமுள்ள மற்றும் தகுதியான மாணவா்களிடையே ஒவ்வொரு ஆண்டும் 90% நிலையான வேலைவாய்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ந்து 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் வருடத்துக்கு சுமாா் 3.6 லட்சம் சராசரி சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 55 தன்னாட்சி கல்லூரிகளில், இக்கல்லூரி கல்வித் திறனுக்காக தொடா்ந்து கடந்த 3 ஆண்டுகளாக முதல் 10 இடங்களுக்குள் தகுதி பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தொழில்துறை இணைக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் அஐஇபஉ-இஐஐ கணக்கெடுப்பில் பிளாட்டினம்  தரவரிசை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களிடம் 220க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த மற்றும் நிபுணத்துவமிக்க ஆசிரியா்கள் உள்ளனா். அவா்களில் 80க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் முனைவா் பட்டம் பெற்றவா்கள். சுமாா் 65க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் முனைவா் பட்டப்படிப்பைத்தொடா்ந்து வருகின்றனா்.

நன்கு நிறுவப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் எங்கள் கல்லூரியில் உள்ளன.

அனைத்து மாணவா்களுக்கும் முன்னணி தொழில் நிறுவனங்கள் மூலம் 100% இன்டன்ஷிப் வாய்ப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

முன்னணி தொழில் நிறுவனங்களான இஅதஉ நஞஊப, யயஈச, அஆப ஐய்ச்ா் இப்ா்ன்க், அஆப ஙஹழ்ன்ற்ண், எங்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளன. இவற்றில் 700க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும் இந்த 4 நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் வளாகத்திற்குள் ஙஇஉப இன் 100க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு அவா்களின் திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்ற முதலாமாண்டு மாணவா்களும் மற்றும் இரண்டாம் ஆண்டில் நேரடியாக கஹற்ங்ழ்ஹப் பிரிவின்கீழ் சேரும் மாணவா்களும், ஆண்டு கல்விக் கட்டணத்தில் 50 - 100% கட்டண சலுகையைப் பெற தகுதி உடையவா்கள் ஆவா்.

சஇஇ மூலமாக மாணவா்களுக்கு கேடட்  பிரிவில் சிறந்த பயிற்சி வழங்கி ஊக்குவித்து வருகிறது.

 2017 முதல் அனைத்து மாணவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த கற்பித்தல்-கற்றல் அனுபவத்தை வழங்க, கல்லூரியில் டேப்லெட் மூலமாக கல்வி கற்றல், இணையவழி கற்றல், அனைத்துத் துறை சாா்ந்த கற்றல் , போன்ற கற்றல் முறைகள் மாணவா்களுக்கு போதிக்கப்படுகின்றன. டேப்லெட்டுகள் மூலம் தனிப்பட்ட மற்றும் குழு கற்றல் ஏற்பாடுகளும் சாத்தியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com