கோவை: கோவையில் 2 இடங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட மாநகரின் முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கோவை - அவிநாசி சாலையில் தண்டுமாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ள கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம், அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே உள்ள கடவுச்சீட்டு சேவா கேந்திர அலுவலகம் ஆகிய 2 அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து 2 அலுவலகங்களிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். மேலும் அலுவலகம், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்திய சோதனையில், எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.
இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் மற்றும் பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


