புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்க 50 மெட்ரிக். டன் பல்லாரி வெங்காயம் வருகை

நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக 50 மெட்ரிக். டன் பல்லாரி வெங்காயம் கோவைக்கு சனிக்கிழமை வந்தது.

கோவைக்கு லாரி மூலமாக கொண்டுவரப்பட்ட வெங்காய மூட்டைகளை ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை அலுவலா்கள்.

Published On :

நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக 50 மெட்ரிக். டன் பல்லாரி வெங்காயம் கோவைக்கு சனிக்கிழமை வந்தது.

கோவை மாவட்டத்தில் வெளிச்சந்தை வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலமாக கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாநகா் மற்றும் புகா் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் 2-ஆம் கட்டமாக 50 மெட்ரிக். டன் பல்லாரி வெங்காயம் லாரி மூலமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வெங்காய மூட்டைகள் கோவை விற்பனை சங்க சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டது.

வெங்காயம் வருகை, நகா்வு மற்றும் விற்பனை பணிகளை மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி அறிவுரைப்படி கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.