கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

டெங்கு கொசு ஒழிப்புப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஈரோடு  மாவட்ட  ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.  

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:09 am

DIN

சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஈரோடு  மாவட்ட  ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.  
சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில்  டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்
இப்பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர்  எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். சென்னிமலை பேரூராட்சிக்குள்பட்ட சிரகிரிவேலவன் நகர் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி,  மாதேஸ்வரா நகர் ஆகிய பகுதியிலுள்ள
வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள தொட்டிகளைப் பார்வையிட்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். சாஸ்திரி நகர் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியைப் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது,  பெருந்துறை வட்டாட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.