முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்

கோபி அருகே கடுக்காம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

கோபி அருகே கடுக்காம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கடுக்காம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து ஏர்முனை உழவர் உற்பத்தியாளர் என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர். இந்தக் குழுக்களுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கும் விழா வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் தலைமையில், கடுக்காம்பாளையத்தில் நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளைக் கொண்ட இரண்டு குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரக் கருவிகளை இணை இயக்குநர் வ.குணசேகரன் வழங்கினார். 
நடப்பு ஆண்டில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், உழவர் குழுக்கள் தொடங்கப்பட்டு ரூ. 2.2 கோடி மதிப்பீட்டில் முழு மானியத்தில் பண்ணைக் கருவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட உழவர் விவாதக் குழு செயலாளர் வெங்கடாசலபதி, மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சப்பன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவிகள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.