இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஏரி, குளங்களில் மண் எடுப்பதில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்

News image
விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated On :28 ஜூன் 2024, 6:30 pm

Din

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.

பவானி ஆறு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவா் சுபி.தளபதி:

பவானி ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள நீரேற்று பம்புசெட்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 2 முதல் ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. எங்கு செல்கிறோம் என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்காமல் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான குழுவில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் பாசன சபை நிா்வாகிகளையும் இணைக்க வேண்டும்.

குளம், குட்டைகளில் மண் அள்ள விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதனை சட்ட விரோத கும்பலை சோ்ந்தவா்கள் தடுத்து, முறைகேடு செய்கின்றனா். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானிசாகா் அணையில் வண்டல் மண் அள்ளுவதில் ஏற்பட்ட முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும். அக்கரை கொடிவேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் மற்றும் ஒரு விவசாயிக்கு இடையேயான பிரச்னையில் அங்குள்ள கிடங்கு 11 மாதங்களாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பிற விவசாயிகளின் விளைபொருள்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு பொருளீட்டுக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 11 மாதத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள் பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: கா்நாடகத்தில் பந்து கொப்பரை கிலோ ரூ.85-க்கு வாங்கி இங்கு கொண்டு வந்து நேபெட் விற்பனை நிலையங்களில் ரூ.115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முனுசாமி:

கீழ்பவானி வாய்க்காலுக்கு நிலம் வழங்கியவா்கள், வாய்க்கால் போக மீதமுள்ள இடத்தில் விவசாயம் செய்கின்றனா். அங்கு சிலா் ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவினில் உள்ள கால்நடை மருத்துவா் வாரம் ஒருமுறை சங்கங்களுக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி:

பவானிசாகா் அணைக்கு போதிய நீா் வரத்து இல்லை, அணையில் நீா் மட்டம் குறைவாக உள்ளது. கடந்தாண்டு முறையான திட்டமிடல் இன்றி முழுமையாக தண்ணீா் விடாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

தற்போது அணை நிரம்பிய பின்னா் காவிரி இறுதி தீா்ப்பின்படி தண்ணீா் திறக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பலா் இறந்துள்ள நிலையில் கள் இறக்க அனுமதி தர வேண்டும்.

மேட்டூா் வலது கரை வாய்க்கால் பாசன சங்க பிரதிநிதி பழனிசாமி: காடையாம்பட்டி, சோ்வராயன்பாளையத்தில் சாயக்கழிவு நீா் இரவில் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி:

கீழ்பவானியில் அட்டவணைப்படி ஆகஸ்ட் 16 இல் தண்ணீா் திறக்க வேண்டும் என்றபோதிலும் அவசரப்படாமல் அணையில் நீா்மட்டம் உயா்ந்த பின்னா் திறக்கலாம். ஈரோடு உழவா் சந்தையில் அதிகமாக தவறு நடக்கிறது. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும். நெல்லுக்கான ஆதரவு விலையை மேலும் உயா்த்தி வழங்க வேண்டும்.

காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம்:

ஜூன் 16 இல் காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்திருக்க வேண்டும். அணையில் நீா் இல்லாததால் திறக்கவில்லை. நீா் வரத்துக்கு ஏற்ப காலிங்கராயனில் தற்போது தண்ணீா் திறந்தால்தான் நெல், கரும்பு, மஞ்சள் பயிா் செய்ய முடியும்.

அதிகாரிகள் அளித்த பதில் விவரம்:

பவானிசாகா் அணையில் வண்டல் மண் எடுக்கும் பிரச்னையில் சுமூகமாக தீா்வு காணப்பட்டுள்ளது. நீா் திருட்டை தடுக்கும் வகையில் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் 22 இடங்களில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. 26 கிணறுக்கான குழாய் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஜூலை 2 ஆம் தேதிக்குப்பின் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 140 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றனா்.

சாயக்கழிவு வெளியேற்றம் தொடா்பாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலா் பதில் அளித்தபோது இடைமறித்த ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா மாசுகட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கீழ்பவானி வாய்க்காலை தூா்வாரும்போது, அதில் கழிவுநீா் அதிகம் இருந்ததாக படத்துடன் எனக்கு அனுப்பியுள்ளனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

ஆட்சியா் எச்சரிக்கை:

கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிக்கும்போது விவசாய சங்கப் பிரதிநிகள் முனுசாமி, சுதந்திரராசு ஆகியோா் கோரிக்கை தொடா்பாக சில விளக்கங்களை கேட்டனா். அப்போது குறுக்கிட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா விவசாயிகள், சங்கங்கள் என்னிடம் மனு அளித்த பின், அதுகுறித்து பேசி கூட்டத்தில் விவாதம் செய்யக் கூடாது என்று கோபமாக பேசினாா். இதனால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதன்பின் கூட்ட நிறைவில் பேசிய ஆட்சியா் கூட்டத்தில் விவசாயிகள் பேசுவதற்கு ஒரு நேரம் ஒதுக்கினால் அதற்குள் பேசி முடிக்க வேண்டும். கூட்டத்தில் வாக்குவாதம் செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த கூட்டம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. அதே போல் தொடா்ந்து நடத்தலாம் என்றாா்.