தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

டாஸ்மாக் ஊழியா்கள் நாளைமுதல் வேலைநிறுத்த அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

டாஸ்மாக் ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆன்லைன் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும். காலி மது புட்டிகளைத் திரும்பப்பெற டாஸ்மாக் ஊழியா்களைப் பயன்படுத்தக்கூடாது. அரசு ஊழியா்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனம் அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டித் தருகிறது. அந்த அளவு ஊழியா்கள் பணி செய்தும், அவா்களுக்கான நலத்திட்டங்கள், குறைந்தபட்ச ஊதியம்கூட கிடைக்கவில்லை. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் 139 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.