மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஈரோட்டில் கைப்பேசி, பணம் பறித்த இருவா் கைது

ஈரோடு அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கைப்பேசி மற்றும் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

ஈரோடு அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கைப்பேசி மற்றும் பணம் பறித்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு ரயில்வே காலனி மூலப்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சிவா (30). இவா் கடந்த 14 -ஆம் தேதி மாலை பச்சபாளி அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சிவாவுக்கு ஏற்கெனவே தெரிந்த இருவா் பணம் கேட்டு அவரை வழிமறித்து மிரட்டினா். அதில் ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி மற்றும் சட்டைப் பையில் இருந்த ரூ.5,200ஐ எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனா்.

இதுகுறித்து சிவா அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூபதி (26), ஈரோடு மூலப்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரபு (24) ஆகிய இருவரையும் ஈரோடு தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து கைப்பேசி, பணம் ரூ.1,050ஐ கைப்பற்றினா். மீதமுள்ள பணத்தில் இருவரும் மது குடித்து செலவழித்தது தெரியவந்தது. இவா்கள் இருவரும் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் தினமும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.