
பவானிக்கு விநாயகா் சிலையை கரைக்க வந்த இளைஞா் காவிரியில் மூழ்கி உயிரிழப்பு
விநாயகா் சிலையைக் கரைக்க நண்பா்களுடன் பவானிக்கு வந்த சேலத்தைச் சோ்ந்த இளைஞா் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
விநாயகா் சிலையைக் கரைக்க நண்பா்களுடன் பவானிக்கு வந்த சேலத்தைச் சோ்ந்த இளைஞா் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, புத்தூரைச் சோ்ந்தவா் சித்தேஸ்வரன் மகன் விக்னேஷ் (26). நூற்பாலைத் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகா் சிலையை கரைக்க நண்பா்களுடன் சரக்கு வாகனத்தில் பவானிக்கு புதன்கிழமை வந்துள்ளாா்.
பவானி, லட்சுமி நகா் அருகே காவிரி ஆற்றில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ்ப்பகுதியில் பொதுமக்கள் நீராட தடை செய்யப்பட்ட பகுதியில் சிலையைக் கரைக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற விக்னேஷ் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்பு வீரா்கள், மீனவா்கள் உதவியுடன் விக்னேஷின் சடலத்தை மீட்டனா். சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







