நீலகிரி
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து கூடலூா் உதவி தோட்டக் கலைத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பி.எம்.கிஸான் உள்ளிட்ட அரசின் மானியங்களைப் பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகள், கூடலூரிலுள்ள உதவி தோட்டக்கலை அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ தங்களுடைய ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெறலாம். இதுவரை பெறாத விவசாயிகள் உதவி தோட்டக் கலை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
