உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை செஷயர் ஹோம் மற்றும் ஜிவிஜி கல்லூரி மகளிரியல் மையம் ஆகியவற்றின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூன் 18 மற்றும் ஜூன் 23 ஆ கிய இரண்டு நாள்கள் மாற்றுத் திறனாளிகள் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொ ண்டனர். இதில் 252 மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் 54 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள், 34 பேருக்கு செவித்திறன் கருவிகள், கண்பார்வையற்ற 6 பேருக்கு ஸ்மார்ட்கேன் கருவி, 32 பேருக்கு தரமான கைத்தடிகள், மனரீதியாக பாதிக்கப்பட்ட 102 பேருக்கு இரு சக்கர வாகனங்கள், 24 பேருக்கு செயற்கை கால்கள், கைகள் பொருத்தப்பட்டன. மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு கிட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி செயலர் கெ.ரவீந்திரன், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் கி.புனிதவல்லி, பேராசிரியர் கலைச்செல்வி, செஷயர் ஹோம் ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஜிவிஜி கல்லூரி மகளிரியல் மைய ஒருங்கிணைப்பாளர் சு.சுந்தரிபாய் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








