

அவிநாசி: அவிநாசி அரசு துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் முன்உள்ள பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மூன்று நிரந்தர ஆசிரியர்களும், தற்காலிகமாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித் துறை, வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.
இருப்பினும் இது வரை ஆசிரியர்களை நியமிக்கதாதால் ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் பள்ளியின் நுழைவாயிலின் முன்அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த காவல் துறை, கல்வித் துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் எனக் கூறினர். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.