ஆசிய மூத்தோா் தடகளத்தில் பதக்கங்களை அள்ளிய ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியை
ஆசிய மூத்தோா் தடகளத்தில் திருப்பூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியை தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
இந்திய தடகளக் கூட்டமைப்பின் சாா்பில் 23-ஆவது ஆசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 27 நாடுகளைச் சாா்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 வீரா்கள், 6 வீராங்கனைகள் உள்ளிட்ட 12 போ் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளனா்.
இதில், திருப்பூா் சின்னசாமியம்மாள் நகராட்சிப் பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியையும், மூத்தோா் தடகள வீராங்கனையுமான ந.கண்ணம்மாள் பெண்கள் 75 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில், ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதலில் 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளாா்.

