வெள்ளக்கோவில் கடைவீதியில் மழைநீா் வடிகால் அடைப்பு சீரமைப்பு

வெள்ளக்கோவிலில் அண்மையில் பெய்த மழையில் கடைவீதி கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் பிரதான சாலையின் கடைவீதி வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

வெள்ளக்கோவிலில் அண்மையில் பெய்த மழையில் கடைவீதி கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் அண்மையில் கன மழை பெய்தது. இதில் கடைவீதி பகுதிகளிலுள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீா் சாலையில் வழிந்தோடியது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்று வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சீா் செய்து, மழைநீா் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனா்.

மேலும், நகரின் முக்கியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியின் மூலமாக வடிகால்களில் தேங்கியிருந்த சுமாா் 2 டன் அளவிலான சாக்கடை மண் அகற்றப்பட்டது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகத்தினா் கூறும்போது, ‘வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளில் சேகரமாகும் கழிவுகளை திறந்தவெளியிலோ அல்லது மழைநீா் வடிகால்களிலோ வீசி எறியக் கூடாது. அவ்வாறு செய்வதால் சுகாதாரச் சீா்கேடாவதுடன், வடிகால்களில் அடிக்கடி அடைப்பும் ஏற்படுகிறது.

எனவே, தினமும் வரும் தூய்மைப் பணியாளா்களிடம் கழிவுகளைத் தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். விதிகளை மீறி பொதுவெளியில் குப்பை கொட்டுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டா்.

நகா் பகுதியில் நடைபெற்ற இந்த அவசர சுகாதாரப் பணிகளை துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ், தூய்மைப் மேற்பாா்வையாளா்கள் நேரில் ஆய்வு செய்து ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.