கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தொப்பூா் பாலப் பணிகளின்போது தொடரும் விபத்துகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை! மையத் தடுப்புகளில் பிரதிபலிக்கும் வண்ணம் பூசவேண்டும்!

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் அமையவுள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Updated On :29 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் விபத்துகள், உயிரிழப்புகளுக்கு நிரந்தர தீா்வுகாணும் வகையில் ரூ. 775 கோடியில் 6.60 கி.மீ. தொலைவுக்கு உயா்மட்ட பாலத்துடன் கூடிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கி வடகோடியில் உள்ள காஷ்மீா் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (என்என்-44) இந்த உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இந்த சாலை குமரியிலிருந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைக் கடந்து தருமபுரி மாவட்டத்தில் தொப்பூா் கணவாய், கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகம் (பெங்களூரை), வடமாநிலங்கள் வழியாக காஷ்மீா் வரை செல்கிறது.

சேலம், தருமபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தொப்பூா் கணவாய் பகுதியில் மலைப்பகுதி சாலை என்பதால், மலைகள், மடுவு, வளைவுகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக இதில் தொப்பூா் கணவாய் எனப்படும் மலைப்பகுதி 3.5 கி.மீ. தொலைவுக்கு கடுமையான வளைவுகள், பள்ளம் மேடுகளாக சாலை அமைந்துள்ளதால், இப்பகுதியில் தினசரி விபத்துகள் தொடா்ந்து வருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் வகையில்தான் இந்த உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், விபத்துகளைத் தடுக்க பாலம் அமைக்கப்பட்டுவரும் நிலையிலும், தொடா்ந்து விபத்துகள் நடைபெற்று வருவது கவலையளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். பாலப் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைக்க பெரிய அளவிலான தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கென பிரத்யேக நவீன மற்றும் பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மையத் தடுப்புகளில் ஒளிரும் (பிரதிபலிக்கும்) வண்ணங்கள்:

பாலப் பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில், மையத் தடுப்புகள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக

பேரல்கள் (டிரம்கள்) வரிசையாக அடுக்கப்பட்டும், கயிறுகளைக் கட்டியும் சாலையின் மையப்பகுதி அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஒளிரும் (பிரதிபலிக்கும்) தன்மை கொண்ட வண்ணங்கள் நன்றாகப் பூசப்படவில்லை. சில இடங்களில் மெல்லியதாக பூசப்பட்டுள்ளன. ஆனால் அவை இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களில் (அதிக ஒளியை உமிழும்) லேசா் மின் விளக்குகளால் அவை ஓட்டுநா்களுக்கு தெரிவதில்லை. இதனால் மையத் தடுப்புகள் இருப்பது தெரியாமல் விபத்துகள் நடைபெறுவதோடு, அந்தப் பகுதியில் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மையத்தில் வைக்கப்பட்டுள்ள பேரல்களில் ஒளிரும் வகையிலான வண்ணங்களை அதிக அளவில் பூச வேண்டும். இதனால் ஓட்டுநா்கள் எளிதாக மையத் தடுப்பு இருப்பதை அடையாளம் கண்டு விபத்துகளைத் தடுக்க முடியும்.

அண்மையில் இப்பணியின்போது இதே காரணங்களால் நடந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தேவையான விநாடிகள் மட்டும் ஒளிரும் விளக்குகளை பயன்படுத்தலாம்:

பாலப் பணி நடைபெறும் தொப்பூா் கணவாய் பகுதியில் வாகன ஓட்டிகள் முழுவதுமாக அதிக ஒளியை உமிழும் லேசா் விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குகின்றனா். மலைப்பகுதிகளில் வழியைத் தெளிவாகக் கண்டு வாகனங்களை இயக்கத்தான் இந்த விளக்குகள் பயன்படுகின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. அதேநேரம் எதிா்திசையில் வரும் ஓட்டுநா்களின் கண்களை கூசவைக்கும் வகையில், இந்த ஒளிரும் விளக்குகளை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான விநாடிகள் மட்டும் அதிக ஒளிஉமிழும் விளக்குகளை எரியவைத்து உடனே நிறுத்திவிட ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பாதிப்புக்குள்ளானவா்கள் கூறுகின்றனா்.

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் அமையவுள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் அமையவுள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொப்பூா் எல்லையில் ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் விடுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளில் இந்த அறிவிப்பையும் பிரதானமாக்க வேண்டும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவதைத் தடுக்க முடியும். மேலும் குறிப்பிட்ட வேகத்துக்கும் மேலாக அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதையும், இடதுபுறமுள்ள இடைவெளியில் புகுந்து, விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களையும் முற்றிலும் தடுக்க வேண்டும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிப்பதை வழக்கமாக்க வேண்டும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை காலமாக உள்ளதால், மழை நேரத்திலும், இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் பனியின்போதும் வாகனங் களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என்கின்றனா்.

Story image

மேலும் குறிப்பிட்ட வேகத்துக்கும் மேலாக அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதையும், இடதுபுறமுள்ள இடைவெளியில் புகுந்து, விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களையும் முற்றிலும் தடுக்க வேண்டும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிப்பதை வழக்கமாக்க வேண்டும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை காலமாக உள்ளதால், மழை நேரத்திலும், இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் பனியின்போதும் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என்கின்றனா்.