ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்


தருமபுரி, ஜூலை 11: ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி, செங்கொடிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவா் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளா் டி.மாதையன், மாவட்டப் பொருளாளா் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.
இக்கூட்டத்தில் பேரவையில் புதிய மாவட்டச் செயலாளராக ஏ.சேகா் தோ்வு செய்யப்பட்டாா். இதில் மலக்குழி மரணத்தைத் தடுக்க உயா்கல்வியில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்க வேண்டும் . இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஜூலை 19-ஆம் தேதியன்று தருமபுரி, அரூா், பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஏழை மற்றும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு நிகழ்ச்சிகள், கிராம சபைக் கூட்டங்களில் மக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...