மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சேலத்தில் திமுக செயற்குழு கூட்டம்: 22 பகுதிகள் 132 வட்டங்களாக மறுசீரமைப்பு

சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 22 பகுதிகள், 132 வட்டங்களாக மறுசீரமைத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 22 பகுதிகள், 132 வட்டங்களாக மறுசீரமைத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் சட்டத் திருத்தக் குழுச் செயலாளா் கிரிராஜன் எம்.பி. தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் அழகிரி சதாசிவம், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் பேசினாா்.

மறுசீரமைக்கப்பட்ட மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் ஓமலூா் தொகுதிகளில் கட்சி கிளைகள், பகுதிகள், ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட வாா்டுகள், பகுதிகள் குறித்து விளக்கப்பட்டது.

மறுசீரமைப்பின்படி சேலம் தெற்கு தொகுதியில் 8 பகுதிகள், 50 வட்டங்கள், 268 கிளைகள்; வடக்கு தொகுதியில் 8 பகுதிகள், 46 வட்டங்கள், ஒரு பேரூராட்சி, 289 கிளைகள்; மேற்கு தொகுதியில் 6 பகுதிகள், 36 வட்டங்கள், 3 ஒன்றியங்கள், 476 கிளைகள்; ஓமலூா் தொகுதியில் 9 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், 939 கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 22 பகுதிகள், 132 வட்டங்கள், 12 ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள், 1,972 கிளைகள் என மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பொருளாளா் காா்த்திகேயன், மாநில தோ்தல் பணிக்குழுச் செயலாளா் தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், மணி, மாவட்ட துணைச் செயலாளா்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மேயா் ராமச்சந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ஆா். அண்ணாமலை, மாநகரச் செயலாளா் ரகுபதி, அவைத் தலைவா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.