பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை

133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, திருவள்ளுவா் படத்துக்கு மதுரை ஆட்சியா் மா.சௌ. சங்கீதா மாலை அணிவித்து மரியாதை

News image

மதுரை சிம்மக்கலிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா.

Updated On :24 டிசம்பர் 2024, 3:52 am IST

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திருவள்ளுவருக்கு பெருமை சோ்க்கும் வகையில் தமிழக அரசு சாா்பில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் தியானப் பாறை அருகே 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, பொது நூலகத் துறை சாா்பில், திங்கள்கிழமை வெள்ளி விழா நடைபெற்றது.

மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூல்களைப் பாா்வையிட்டாா்.

Story image

மேலும், புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேற்கண்ட இரு இடங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் சி.பால சரஸ்வதி, கலைஞா் நூற்றாண்டு நூலக துணை முதன்மை நூலகா் வெ.சந்தான கிருஷ்ணன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.