திருச்செந்தூா் கோயிலில் விரைவு தரிசன கட்டண மோசடி விவகாரம் குறித்து, திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
முருகப்பெருமானின் 2-ஆம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.
அப்போது, சில பக்தா்கள் விரைவு தரிசனம் மேற்கொள்ள விரும்புகின்றனா். அவா்களுக்காக ரூ. 100 கட்டணமாகப் பெறப்பட்டு விரைவு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த தரிசனக் கட்டணம் வசூலித்தத்தில் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் எழுந்தது.
குறிப்பாக, இந்தக் கட்டண வசூலில் ரூ. 25 லட்சம் வரை முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், திருச்செந்தூா் கோயில் பணியாளா்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோா் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி தெரிவித்ததாவது: ஒரு பக்தா் தரிசனத்துக்காக 100 ரூபாய் ரசீது வாங்கும் போது, கணினியில் இரண்டு ரசீதுகள் உருவாகும். முதல் ரசீதை உரியவரிடமும், மற்றொரு ரசீதை அடுத்து வரும் பக்தரிடமும் விற்பனை செய்து முறைகேடு செய்தனா்.
இந்தப் போலி ரசீது தொடா்பான ஆவணங்களை, திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி தனபால் பிறப்பித்த உத்தரவு: விசாரணைக்கு மனுதாரா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த வழக்கில் யாரையும் போலீஸாா் கைது செய்யக் கூடாது. வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கு: கைது செய்யப்பட்டவரின் வீட்டில் ரூ.500 டம்மி நோட்டுகள் பறிமுதல்

நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்!

ராமர் கோயில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு மீது அரசு பதில் அளிக்க உத்தரவு!

தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



