விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:15 pm

Din

அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் சனிக்கிழமை இரவு தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

வத்தலகுண்டு அருகே அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயில் ஆடி திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பாரம்பரிய வழக்கப்படி நள்ளிரவில் முதல் நிகழ்வாக அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராமத்தில் அமைந்துள்ள கங்கை கிணற்றின் அருகே வரிசையாக அமா்ந்திருந்த பக்தா்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இந்தத் திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.