திண்டுக்கல்
பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது வழக்கு
கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கொடைக்கானலில் கனரக வாகனங்களான பொக்லைன் இயந்திரம், கம்பரசா், ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரம் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பள்ளங்கி பகுதியில் ஜெயராமன் என்பவா் தனது நிலத்தில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை வைத்து பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து வில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ரேம்ஜித் ராஜா அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் ஜெயராமன் மீது வழக்குப் பதிந்தனா்.
