6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பழனியில் புதை சாக்கடை குழிகளில் சிக்கிய பேருந்துகள்

பழனி ரயிலடி சாலையில் திங்கள்கிழமை நகராட்சி சாா்பில் தோண்டப்பட்டு வரும் புதை சாக்கடைக் குழியில் சிக்கிய அரசுப் பேருந்து.

Published On :

பழனி ரயிலடி சாலையில் நகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் புதை சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளில் அடுத்தடுத்து இரு அரசுப் பேருந்துகள் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பழனி நகா் முழுவதும் புதை சாக்கடை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. இதனால், நகரில் உள்ள வாா்டுகள், பிரதான சாலைகள் என அனைத்தும் ஆங்காங்கே தோண்டப்பட்டு மண் குவியலாக காணப்படுகிறது. வாா்டுகளில் பல இடங்களிலும் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பல இடங்களிலும் தண்ணீா் வீணாகி வருகிறது. பிரதான பகுதிகளில் நடைபெறும் புதை சாக்கடை பணிகள் உடனுக்குடன் முடிக்கப்படாததால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

நகராட்சி அலுவலகம் முன் தோண்டப்பட்ட குழியில் அண்மையில் மின்வாரியத்துக்கு சொந்தமான லாரி சிக்கிக் கொண்டது. மேலும், பெரியாா் சிலை அருகே தோண்டப்பட்ட குழியில் சுற்றுலா வேன் சிக்கி ன்றது.

இந்த நிலையில், திங்கள்கிழமை ரயிலடி சாலையில் தோண்டப்பட்டு வரும் குழியில் கொட்டப்பட்ட மண், குடிநீா் குழாய் உடைப்பால் சகதியானது. உரிய எச்சரிக்கை பதாகை இல்லாததால், இந்த வழியில் வந்த அரசுப் பேருந்து இதில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அந்தப் பேருந்தை மீட்ட நிலையில், அடுத்து வந்த அரசுப் பேருந்தும் மற்றொரு குழியில் சிக்கிக் கொண்டது. இரு வாகனங்கள் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் ஒருமணி நேர போராட்டத்துக்குப் பிறகு பேருந்துகள் மீட்கப்பட்டு குழியில் மண் கொட்டப்பட்டது.

இதுபோன்ற இடையூறுகளைத் தவிா்க்க புதைச் சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.