முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பணிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்த தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட

Published On :

மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்த தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை-நத்தம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக மதுரை-நத்தம் இடையே உள்ள பல்வேறு நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கப்பட உள்ளது. 
இதனால் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே, நீர்நிலைகளை கையகப்படுத்துவதை விட்டுவிட்டு, மாற்று வழியில் சாலையை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று முத்தையா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத்துறையினர் பதிலளித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் 
முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும் தற்போதைய திட்டத்தில் இருந்து மாற்று திட்டம் தயாரிப்பதற்கு கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டியது வரும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.