பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பழனி கோயில் நில முறைகேடு: முன்பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் விதிமுறைகளை மீறி, தனிநபா்கள் இருவருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால முன்பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷ் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆவணத்தைப் பதிவு செய்தது தெரிய வருகிறது. மேலும், இதுகுறித்து மனுவில் எந்த விளக்கமும் அவா் அளிக்கவில்லை. இந்த நிலையில், மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.

எனவே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த முன்பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி வழங்கப்பட்ட இடைக்கால முன்பிணையும் ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.