மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மின்கல வாகனச் சேவை: ரயில்வே நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களுக்குள்பட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோா், கா்ப்பிணிகளுக்கு இலவசமாக மின்கல வாகனச் சேவை வழங்கக் கோரிய மனு தொடா்பாக 15 நாள்களுக்குள் ரயில்வே நிா்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Updated On :

திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களுக்குள்பட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோா், கா்ப்பிணிகளுக்கு இலவசமாக மின்கல வாகனச் சேவை வழங்கக் கோரிய மனு தொடா்பாக 15 நாள்களுக்குள் ரயில்வே நிா்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர விமல்நாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட

மின்கல வாகனச் சேவை ஆரம்பத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், 2018-ஆம் ஆண்டு முதல் இந்தச் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒரு பயணிக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே சேவை மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த மாற்றுத் திறனாளி காமராஜ், அவரது தாய்க்கு உரிய உதவி கிடைக்கவில்லை. மேலும், சக்கர நாற்காலியும் மறுக்கப்பட்டதால், காமராஜ் நடைமேடையில் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருச்சி கோட்டத்தில் உள்ள 151 ரயில் நிலையங்களில் 5 நிலையங்களில் மட்டுமே மின்கல வாகன வசதி உள்ளது. மதுரைக் கோட்டத்தில் உள்ள 101 ரயில் நிலையங்களில் 6 நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. ரயில்வே வாரியத்தின் வணிகச் சுற்றறிக்கைகளின்படி, மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மின்கல வாகனச் சேவையை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

எனவே, திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களுக்குள்பட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு மின்கல வாகனச் சேவையை இலவசமாக வழங்க வேண்டும்.

இந்த வாகனங்கள் நிற்கும் இடங்களைக் குறிக்கும் அறிவிப்புப் பலகைகளை அமைக்க வேண்டும். 139 உதவி எண் உள்ளிட்ட புகாா் தீா்வு அமைப்புகளை முறையாகச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ரயில்வே நிா்வாகம் தரப்பில் 15 நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.