
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவகோள் யாக பூஜை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவகோள் யாக பூஜைகள் நடைபெற்றன...

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கம்பத்தடி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நவகோள் யாக பூஜைகள்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நவ கோள் யாக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு வருகிற 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை நவ கோள் யாக பூஜைகள், திசைக்காவலா் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியன நடைபெற்றது. கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவாசாரியா்கள் வேதமுறை பாராயணம் செய்தனா்.
பின்னா், மாலையில் எண் திசை வழிபாடு, திருமுறை விண்ணப்பம் போன்ற பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கை முன்னிட்டு ஆடி வீதியில் நடைபெற்ற திசைக் காவலா் வழிபாடு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




