கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தேனி மாவட்டத்தில் 11 புதிய தடுப்பணைகள்: முதல்வர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் புதிதாக 11 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:25 pm

DIN

தேனி மாவட்டத்தில் புதிதாக 11 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் நீராதாரத்தை மேம்படுத்துவதற்காக மூல வைகை ஆறு, வாழையாறு,  பிள்ளயார் ஊத்து, நாகலாறு ஓடை, கொட்டகுடி ஆறு,  சின்னாறு,  சுத்தகங்கை ஓடை, மஞ்சளாறு ஆகியவற்றின் குறுக்கே புதிதாக 11 தடுப்பணைகள் கட்டப்படும்.
பெரியகுளம் வட்டாரம் புது அணைக்கட்டு கால்வாய்,  மத்துவார் குளம் ஆகியவை தூர்வாரப்பட்டு வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்படும். தேனி,  மீறு சமுத்திரம் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு, அதன் கொள்ளளவு உயர்த்தப்படும். ஆண்டிபட்டி கணவாய் முதல்  தி.சுப்புலாபுரம் வரை உள்ள சாலை, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போடி விலக்கு வரையுள்ள சாலை ஆகியவை வலுப்படுத்தப்படும். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.