தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சுருளி அருவியில் சேதமடைந்த தடுப்புக் கம்பிகள் சீரமைக்கப்படுமா?

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சுருளி அருவியை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சுருளி அருவியை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையான இடத்தை வகிப்பது கம்பம் அருகே உள்ள சுருளிஅருவி. இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 20 நாள்களுக்கும் மேலாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. 
இந்த வெள்ளப் பெருக்கின் போது, சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு இரும்புக் கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், கான்கிரீட் தரைகள் பெயர்ந்தன. அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் பெயர்ந்தும், ஆண்கள், பெண்கள் குளித்து விட்டு உடைமாற்றும் அறையின் கதவுகள் உடைந்தும் கிடக்கின்றன. கதவுகள் உடைந்து கிடப்பதால், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், அருவியின் வளாகத்தை சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். 
இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள வனப்பகுதி வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்ற பின்னர்தான், அருவிக்கு செல்ல முடியும். முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் செல்ல, வனச் சரணாலயத்தினர் பேருந்து மற்றும் பேட்டரி காரை இயக்கி வருகின்றனர். 
சீசன் நேரங்களில் கூட்டம் அதிகமான இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், வெகு நேரமாக காத்திருந்து பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். மேலும் பேட்டரி கார் அடிக்கடி பழுதாவதால் அதை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
பயனற்ற பயணியர் விடுதி: கம்பம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் விடுதி, முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. கழிப்பறை, குளியலறை, கட்டில்கள் மிகவும் சேதமடைந்தும், மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் பெயர்ந்தும், இடிந்தும் உள்ளதால் பயன்பாடின்றி கிடக்கிறது. 
இதனால் ஊராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே சுருளி அருவிப் பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி சுற்றுலாப் பயணி அ.சிவக்குமார் கூறியதாவது: வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள்  செய்து தரப்பட வில்லை. 
சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. 
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு ஏற்படுகிறது. இறந்தவர்களுக்கு திதி செய்யும் போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு மேகமலை வன உயிரின சரணாலயத்தினரும், ராயப்பன்பட்டி காவல் நிலையத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 இதுகுறித்து மேகமலை வன உயிரின சரணாலய பகுதியின் கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை.தினேஷ் கூறியது: சுருளி அருவிப் பகுதியில், முதலில் சாலை,  சிறுவர் பூங்கா, சரணாலயத்தில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றிய விளக்க கட்டடம், வனம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளில் மாணவ, மாணவியர் பங்கேற்க பயிற்சி அரங்கு  அமைக்கவும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மேலும் அருவிப் பகுதியை பராமரிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.