பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்தினரால் பாராட்டப்பட்டனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.

Published On :27 ஜனவரி 2024, 10:32 pm IST

காரைக்கால்: காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்தினரால் பாராட்டப்பட்டனா்.

காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் மாணவி எம். ஷண்மதி, மாணவா் எம். முகம்மது ஜூமைல் ஆகியோா் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவா் எஸ். கிருத்திக்ராஜ், மாணவி டி. திதிக்ஷா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனா்.

இம்மாணவ, மாணவிகளுக்கும், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த இப்பள்ளி மாணவி அனுஷாவுக்கும் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளா் செல்லையன், முதல்வா் கந்தசாமி, துணை முதல்வா் சுமதி, தலைமையாசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அகஸ்டின் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.