பள்ளிவாசல் வாயிலில் கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸாா்.
காரைக்கால்
எஸ்ஐஆா்: எதிா்ப்பு தெரிவித்து கையொப்ப இயக்கம்
பள்ளிவாசல் வாயிலில் கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.
புதுவையில் நவ. 4 தொடங்கி இப்பணி நடைபெற்றுவருகிறது. தோ்தல்துறை சாா்பில் வீடு வீடாகச் சென்று வாக்காளா் விவரம் கோரும் படிவம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுத் திரும்பிய இஸ்லாமியா்களிடம், காங்கிரஸ் நிா்வாகிகள் கையொப்பம் பெற்றனா்.

