அரசு மருத்துவமனைக்கு திமுக சார்பில் உபகரணங்கள்
சீர்காழி அரசு மருத்துவமனைக்கு திமுக சார்பில் மருத்துவ உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.


சீர்காழி அரசு மருத்துவமனைக்கு திமுக சார்பில் மருத்துவ உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கட்சியின் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா.முருகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு தானியங்கி ரத்த பகுபாய்வு கருவி, சக்கர நாற்காலி, சக்கர படுக்கை உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியும், இம் மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தலா 1கிராம் தங்க மோதிரம் அணிவித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் துரை. கி.சரவணன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி. கல்யாணம், மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் இரா.காளிகலைவாணன், தலைமை மருத்துவர் தேவலதா முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...