கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மயிலாடுதுறை பகுதிகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரை

மயிலாடுதுறை பகுதிகளில் புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:16 am

DIN

மயிலாடுதுறை பகுதிகளில் புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்தபோது,  அதிலிருந்து தீப்பொறி குடிசை வீடுகள் மீது விழுந்ததால், மயிலாடுதுறை வட்டம், நீடுர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆ.ஜேம்ஸ் ஆல்பர்ட், ஊர்குடி கீழத் தெருவைச் சேர்ந்த ச.ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீடுகளும்,  வீடுகளில் வைக்கப்பட்டிருந்த  பொருள்களும் புதன்கிழமை தீக்கிரையாயின.  
இதேபோல் மயிலாடுதுறை வட்டம்,  நல்லத்துக்குடி ஓம் சக்தி நகரைச் சேர்ந்த   வீரமணி என்பவரது குடிசை  வீடு, வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.  இந்த விபத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த  பொருள்கள் அனைத்தும் தீயில் கருகின.
இதைத்   தொடர்ந்து  மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி மற்றும் வருவாய்த் துறையினர்  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச்  சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அரசின் சார்பில் வழங்கப்படும் உதவிகளை வியாழக்கிழமை வழங்கினர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.