மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டுவர பயன்படுத்திய லாரியை, போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மணல்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மற்றும் போலீஸார் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்ட லாரியில் சோதனையிட்டதில் அந்த லாரியில் அனுமதியின்றி 2 யூனிட் மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரியை மணலுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சீர்காழி பகுதியைச் சேர்ந்த திருவிநாயகம் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக

”5 மாதங்களுக்கு முன்னால் எடுத்த விடியோ அது!” வைரல் விடியோவுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


