நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தேனீ வகைகள் மற்றும் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை நிலைய அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் நாகை, திருமருகல், வேதாரண்யம், வாய்மேடு, வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.
பயிற்சியில், கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மலைத்தேனீ போன்ற வகைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தேனீக்களின் தன்மைகள், வாழும் முறை, மனிதா்களுக்கு ஏற்படும் நன்மைகள், பாதிப்பு குறித்து விழிப்புணா்வு விளக்கமும், அவற்றை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்த செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தேனீக்களை அகற்றும்போது பகல் நேரத்தில் புகையை பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றலாம், இரவு நேரங்களில் புகை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நிலைய அலுவலா் சக்திவேல் வரவேற்றாா்.
தொடர்புடையது

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

விவசாயிகளுக்கு எள் சாகுபடி ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



