கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கிருஷ்ணகிரியை மலர் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தை மலர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தை மலர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலன்களுக்கான துறை அமைச்சரிடம் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.அசோக்குமார் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக புது தில்லியில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்கிடம் அவர் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 
கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்த மாவட்டத்தில் 1,200 பசுமைக் குடில்கள்அமைக்கப்பட்டு ரூ.400 கோடி மதிப்பில் மலர் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நான்கு கோடிக்கும் அதிகமான செடிகள், மலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு ரூ.50 கோடிக்கும் அதிமாக அந்நியச் செலாவணி கிடைக்கிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை மலர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாராக்கடன் வசூல் கால 
அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா புதன்கிழமை நிதியமைச்சர் அருண்ஜேட்லியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்தார். அப்போது, இரு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் வசூலிப்பதற்கான கால அவகாசத்தை 31.12.2018 வரையில் 90 நாள்களில் இருந்து 180 நாள்கள் வரை நீட்டிக்க வேண்டும். பின்னர், ஜிஎஸ்டி விதிமுறைகளின் கீழ் நிலைபெற அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிரத்யேகமான பேஸல் விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுக்க வேண்டும். வங்கிகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 மற்றொரு கோரிக்கையில், "முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கோரலுக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறும் விவரங்களை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.