முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

"நீரவ் மோடியுடன் ராகுல் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்'

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் 

Published On :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, தில்லி ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா? என்று ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். அந்த ஹோட்டலில் ராகுல் நீண்ட நேரம் இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில்தான், நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு கடன்கள் அளிக்கப்பட்டன. சிறப்பு பாதுகாப்புப் படையினரிடம் இதுதொடர்பான ஆதாரங்கள் இருக்கலாம் அல்லது உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தலாமா?
குரான் மீது ஆணையிட்டு இதை நான் தெரிவிக்கிறேன். நான் தெரிவிப்பது உண்மை என்பதை நிரூபிக்க உண்மைக் கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்று அந்தப் பதிவுகளில் புனாவாலா குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதே தகவலை புனாவாலா மீண்டும் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், "நான் தெரிவிப்பதை பொய் என்று நிரூபித்தால், அரசியலில் இருந்து விலக தயாராக  இருக்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.