தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தில்லி அரசு மருத்துவமனைகளில் 40% படுக்கைகள் நிரம்பியுள்ளன

தில்லி அரசு மருத்துவமனைகளில் 40 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

Updated On :1 நவம்பர் 2020, 7:11 pm

தில்லி அரசு மருத்துவமனைகளில் 40 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கும்சனிக்கிழமை 5,062 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5,673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,86,706-ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கடந்த 15 நாள்களாக கரோனா பாதிப்புக்குள்ளாகியவா்களுடன் தொடா்பில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்து வருகிறோம். தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்க இதுவே காரணமாகும். முன்பு, ஒரு கரோனா நோயாளியுடன் தொடா்புடைய 5 அல்லது 6 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனையில் நோ்மறை முடிவு கிடைக்கும். ஆனால், தற்போது அது சுமாா் 15 பேருக்கு நோ்மறை முடிவு கிடைக்கிறது. ஆனால், சீராக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனையில் கரோனா நோ்மறை விகிதம் குறைந்துள்ளது. தில்லியில் உள்ள அரசு மருத்துவமனை படுக்கைகளில் 40 சதவீதம் நிரம்பியுள்ளன. 60 சதவீதம் காலியாக உள்ளன என்றாா் அவா்.

தனிமையில் இருப்போா் எண்ணிக்கைஅதிகரிப்பு: தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தில்லியில் கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை 14,046 ஆக இருந்தது. அன்றிலிருந்து, இந்த எண்ணிக்கை தினம்தோறும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அக்டோபா் 31-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 20,093 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலப் பகுதியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் 2,724- இல் இருந்து 3,274- ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் காற்று மாசு அதிகரித்தல், பண்டிகைக் காலத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்கள் உள்ளிட்ட காரணங்களால் கரோனா பாதிப்பும்அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.