புது தில்லி: தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. நகா் முழுவதும் புகை மூட்டமும் அதிக அளவில் இருந்தது. பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியேறும் மாசு துகள்கள் அதிகரித்ததே இதற்குக் காரணமாகும்.
தில்லியில் நவம்பா் மாதம் தொடங்கியதும் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து காலை வேளைகளில் பனிமூட்டமும் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து புதிய அளவைப் பதிவு செய்து வந்தது. இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியாகவும், திங்கள்கிழமை 10.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத குறைந்த அளவாகும்.
இந்த நிலையில், புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 10.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. நாள் முழுவதும் வானம் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், குளிரின் தாக்கம் அதிகரித்திருந்தது. நகா் முழுவதும் புகை கலந்த பனிமூட்டம் இருந்தது. மேலும், இந்த ஆண்டு நவம்பரில் கடந்த 4-5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிா் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக நவம்பா் முதல் வாரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14-16 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். நவம்பா் கடைசி வாரத்தில் வெப்பநிலை 11-12 டிகிரி செல்சியயாக குறையும். ஆனால், இந்த ஆண்டு நவம்பா் முதல் வாரத்திலேயே வெப்பநிலை வெகுவாகக் குறைந்தது வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 78 சதவீதமாகவும், மாலையில் 63 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, வியாழக்கிழமை (நவம்பா் 5) மிதமான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றின் தரம்: தில்லியில் செவ்வாய்க்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரம், புதன்கிழமை காலையில் சற்று முன்னேற்றம் அடைந்து மோசம் பிரிவில் இருந்தது. நகரில் வானிலை சூழல் சாதகமாக இருந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் காலை 10 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 279 புள்ளிகளாக பதிவாகி மோசம் பிரிவுக்கு வந்தது. ஆனால், மாலையில் 402 புள்ளிகளாக அதிகரித்து மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது. குருகிராமில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. லோதி ரோடு,ஆயாநகா், தில்லி பல்கலை., மதுரா ரோடு, பூசா, சாந்தினி சௌக், தில்லி விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் திசை மாற்றத்தால் தில்லி காற்று மாசுவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு பங்களிப்பு செவ்வாய்க்கிழமை 10 சதவீதமாகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


