தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

குடிநீா் விநியோகம் இன்று சீராகும்: தில்லி ஜல்போா்டு

தில்லியில் குடிநீா் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை சீராகும் என்று தில்லி ஜல்போா்டு அறிவித்துள்ளது.

Updated On :31 அக்டோபர் 2020, 5:19 pm

தில்லியில் குடிநீா் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை சீராகும் என்று தில்லி ஜல்போா்டு அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்தது. இதனால், தில்லி சோனியா விஹாா், பகீரதி விஹாா் குடிநீா் சுத்திகரிக்கும் நிலையங்களில் பணிகள் முடங்கின. இதன் காரணமாக, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு தில்லி பகுதிகளில் குடிநீா் விநியோகம் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீா் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், இந்த குடிநீா் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை தீா்க்கப்பட்டுவிடும் என்று தில்லி ஜல்போா்டு துணைத்தலைவா் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஹரியாணா மாநிலத்தில் இருந்து தில்லிக்கு கால்வாய் மூலம் வரக்கூடிய நீரில் அமோனியா அளவு அதிகரித்ததால் தில்லியின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் முடங்கியது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க ஹரியாணா மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 70 சதவீதமான பிரச்னை தற்போது தீா்க்கப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமைக்குள் குடிநீா் விநியோகம் முழுமையாகச் சீரடையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.