தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மக்கள் கூட்டம், குளிா், காற்று மாசு ஆகியவையே கரோனா அதிகரிப்புக்கு காரணம்: தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் விளக்கம்

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதற்கு தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On :31 அக்டோபர் 2020, 5:19 pm

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதற்கு தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் விளக்கம் அளித்துள்ளாா்.

தில்லியில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5.673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,81,644 ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என சத்யேந்தா் ஜெயின் விளக்கம் அளித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடுகிறாா்கள். இது, கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகிறது. தில்லியில் குளிா் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பநிலை குறைந்துள்ளது. காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தக் காரணிகள் சோ்ந்து தில்லியில் கரோனா பாதிப்பை அதிகரித்துள்ளது. மேலும், தில்லியில் காற்று மாசு அதிகரிக்க மக்களின் மெத்தனப் போக்கும் காரணமாகும். பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவது இல்லை. அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். முகக் கவசத்தால் கரோனாவில் இருந்தும், காற்று மாசுவில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பு உத்தரவால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது. ஆனால், மக்கள் அனைவரும், முகக் கவசங்களை அணிந்தால் கரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.