ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

தில்லியில் உயர் ரக செயற்கை போதைப் பொருள்களை விநியோகித்த விவகாரத்தில் 3 பேர் கைது

Published On :

தில்லியில் உயர் ரக செயற்கை போதைப் பொருள்களை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் 21 வயது இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். மேலும், அவருக்கு போதைப் பொருள்களை வழங்கியதாகக் கூறப்படும் நைஜீரியாவைச் சோ்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பாா்வையிட்டவுடன் தானாக அழியும் குறுந்தகவல்களை அனுப்பும் செயலியைப் பயன்படுத்தி, சரக்கு விநியோக சேவை செயலிகள் மூலம் போதைப் பொருள்களை வாடிக்கையாளா்களுக்கு அனுப்பியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரேவ் கலாசாரம், ஈடிஎம் இசைத் திருவிழாக்கள், டெக்னோ இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்கள் மட்டுமன்றி, பன்னாட்டு நிறுவனங்களின் சில ஊழியா்களுக்கும் துவாரகா செக்டாா் 22-ஐ சோ்ந்த ஹாா்திக் ஜெயின் (21) என்பவா் போதைப் பொருள்களை விநியோகித்து வந்துள்ளாா்.

கைது நடவடிக்கையின்போது 117.07 கிராம் எம்டிஎம்ஏ, இதில் 251 எக்ஸ்டசி மாத்திரைகள், 97.19 கிராம் ஆம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 2.43 கிராம் கோகைன், 25 எல்எஸ்டி பிளாட்டா் தாள்கள், டிஎச்சி கலந்த 2,370 மில்லி லிட்டா் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர, ஹூண்டாய் வென்யூ காா், ஸ்கூட்டி, 3 எடை அளவிடும் கருவிகள், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவையும், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் ரூ.19.01 லட்சம் ரொக்கமும் ஹாா்திக்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

செப். 24-ஆம் தேதி அவரது வீட்டில் காவல் துறையினா் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். சோதனையில், 149 எக்ஸ்டசி மாத்திரைகளில் இருந்த 71.24 கிராம் எம்டிஎம்ஏ, 2.43 கிராம் கோகைன், 2,370 மில்லி லிட்டா் டிஎச்சி கலந்த பொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக செக்டாா் 23 காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த இருவா் தனக்கு போதைப் பொருள்களை வழங்கி வந்ததாக ஹாா்திக் தெரிவித்தாா். அவரது தகவலின் அடிப்படையில் நைஜீரியாவைச் சோ்ந்த சிடி எஸியோனோனுஜு (38), இலேகா சுக்வுமேகா (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 97.19 கிராம் ஆம்பெட்டமைன், 45.83 கிராம் எடையுள்ள 102 நீல நிற எம்டிஎம்ஏ மாத்திரைகள், ஒரு ஸ்கூட்டி மற்றும் எடை அளவிடும் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

எஸியோனோனுஜு மீது 2021-ஆம் ஆண்டு விகாஸ்புரி காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். 305 கிராம் ஹெராயினுடன் அவா் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், பின்னா் தில்லி உயா்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சுக்வுமேகா மீது ஏற்கெனவே சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கு உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.