கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் சிறையிலடைப்பு

தாழையூத்து அருகே குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:51 pm

Syndication

தாழையூத்து அருகே குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(25), கணேசன் மகன் அஜித்குமாா்(30), பெருமாள் மகன் கிருஷ்ண பெருமாள் (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் இவா்கள் தொடா்ந்து கொலை மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி பெருமாள், அஜித்குமாா், கிருஷ்ண பெருமாள் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.