நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நாகர்கோவிலில் அல்போன்சா ஆலய தேர்பவனி

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய ஆண்டு பெருவிழாத் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய ஆண்டு பெருவிழாத் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. 
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் சாலையில் உள்ள இந்தத் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ்முட்டத்துபாடம் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார்.  திருவிழாவின் 10 நாள்களும், திருப்பலி, மறையுரை, ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர் பங்கேற்று மறையுரையாற்றினர். 
10  ஆம் திருநாளில் புனித அல்போன்சா சிறப்பு நவ நாளை அல்போன்சா திருத்தல அதிபர் தாமஸ்பௌவத்துப்பறம்பில் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலியை  நிறைவேற்றினார்.
நண்பகல் 12 மணிக்கு திருத்தேர் பவனியும், பிற்பகல் 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
மாலையில் திருக்கொடி இறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, விழாக் குழுத் தலைவர் அகஸ்டின் தறப்பேல், துணை பங்குத்தந்தை அஜின்ஜோஸ், கைக்காரர்கள் ஜேம்ஸ் கல்லூக்காரன், அருள்செல்வம் மற்றும் பங்கு  இறை மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.