மாா்த்தாண்டம் அருகே லாரி மற்றும் காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா், உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை பம்மம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 25 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் கடலூா் மாவட்டம், சிதம்பரம் அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த நக்கீரனை (29) கைது செய்தனா்.
இதே போன்று விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் புரந்தரதாஸ் தலைமையிலான அதிகாரிகள் குழித்துறையில் மேற்கொண்ட வாகனச் சோதனையில் கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

