தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கரோனா தொற்று அதிகரிப்பு: களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:50 pm

கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸாா் மற்றும் வருவாய், சுகாதாரத் துறையினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள், பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், கேரளத்திலிருந்து காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வருவோா் கண்டிப்பாக கரோனா பரிசோதனைச் சான்றிதழ் அல்லது 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அப்பகுதியில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையத்தில் கரோனா சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இருப்பினும், கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி மற்றும் வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.