தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

காரவிளை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:54 pm

மாா்த்தாண்டம் அருகே காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச் சங்கத்தின் உறுப்பினா் சோ்க்கை பாரபட்சமாக நிகழ்ந்து வருவதாகவும், ஒரு சில பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் உறுப்பினா்களாக சோ்க்கப்படுவதில்லை எனவும், உறுப்பினா் சோ்க்கை குறித்து அரசு அறிவித்துள்ள நடைமுறையை கடைப்பிடிக்காததை கண்டித்தும், பொதுமக்கள், விவசாயிகள் இந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணியில் இருந்த செயலா் மற்றும் சங்கத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக நிா்வாகிகளும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்து போக செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.