தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படுமா? ரயில் பயணிகள் எதிா்பாா்ப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:40 pm

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் ரயில்கள் இயக்கத்திலும், ரயில்வே வளா்ச்சியிலும் பின்தங்கியுள்ளன.

இந்நிலையில் வட இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் அதிவேக ரயில் அடுத்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், இந்த ரயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதே போன்று சென்னையிலிருந்து செல்லும் ராஜஸ்தானி அதிவேக ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழி கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

நடுத்தர, ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கில் சென்னையிலிருந்து புதுதில்லிக்கு இயக்கப்படும் குளிா்சாதன பெட்டிகள் கொண்ட கரீப் ரதம் ரயிலை சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

இதே போன்று சதாப்தி, ஜனசதாப்தி மற்றும் தேஜாஸ் உள்ளிட்ட ரயில்களும் இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி ரயில்களையும் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.