தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கொல்லங்கோடு அருகே 420 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 420 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:03 pm

கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 420 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு அருகே மீனவக் கிராமம் வழியாக கேரளத்துக்கு காரில் மண்ணெண்ணெய் கடத்திச் செல்ல உள்ளதாக கொல்லங்கோடு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் நீரோடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் மொத்தம் 420 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்ததும், அவை விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கியது என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.